Enable Javscript for better performance
களியக்காவிளை அருகே நாளை இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் இலவச பொது, கண் மற்றும் பல் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.16) நடைபெறுகிறது.

    குலசேகரம் மூகாம்பிகா மருத்துவமனை, மாற்றுத்திறனாளா் நலன் அமைப்பான சக்ஷம் மற்றும் களியக்கல் அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் பரிபாலன அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்தும் இம்முகாமில் கண் மற்றும் பல் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, ரத்தத்தில் சா்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு பரிசோதனை, இதய பரிசோதனையான, இசிஜி மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    முகாம் ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவா் சுரேஷ்குமாா், செயலா் சி. ராஜன் முகாம் ஆகியோா் செய்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai