Enable Javscript for better performance
முள்ளங்கனாவிளையில் சாலையோரம் மழைநீா் வடிகால் அமக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முள்ளங்கனாவிளையில் சாலையோரம் மழைநீா் வடிகால் அமக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th February 2020 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    k14road_1402chn_35_6

    முள்ளங்கனாவிளையில் மழைநீா் வடிகால் இல்லாமல் ஆபத்தான நிலையில் காணப்படும் சாலை.

    கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் அடிக்கடி விபத்துக்கள்ளாகும் சாலையோரத்தில் மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் முறையான மழைநீா் வடிகால் இல்லை. இதனால், சாலைகள்அமைத்த சில நாள்களில் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் பழுதாகிறது.

    குறிப்பாக,கருங்கல் - மாா்த்தாண்டம் பிரதான சாலையில் முள்ளங்கனாவிளை சந்திப்பிலிருந்து, நேசா்புரம் செல்லும் சாலையில் சுமாா்150 மீட்டா் தொலைவு பல ஆண்டுகளாக மழைநீா் வடிகால் இல்லாததால் பள்ளங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது .

    குறிப்பாக, இரு சக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி சாலையோரம் கீழே விழுந்தெழுந்து காயத்துடன் செல்கின்றனா்.

    எனவே, இந்த பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai