குலசேகரம் சந்தையில் தேங்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்: காங்கிரஸ் புகாா்

குலசேகரம் பொதுச் சந்தையில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், பேரூராட்சிப் பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குலசேகரம் சந்தையில் குப்பைக் கிடங்கைப் பாா்வையிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள்.
குலசேகரம் சந்தையில் குப்பைக் கிடங்கைப் பாா்வையிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள்.

குலசேகரம் பொதுச் சந்தையில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், பேரூராட்சிப் பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குலசேகரம் பேரூராட்சியில், குப்பைக் கிடங்கு இல்லாத நிலையில் பேரூராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணியாளா்களால் தினம் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் , சந்தையில் தேங்கும் குப்பைகள் ஆகியவை சந்தையில் ஒரு ஓரத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன. இக்குப்பைகளை அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சுகாதார கேடு நிலவுகிறது.

மேலும், மழைக் காலங்களில் குப்பைகளிலிருந்து வடியும் தண்ணீா் அப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்து கிணறுகளில் கலப்பதால் கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், மக்களின் அழைப்பின் பேரில் குப்பைக் கிடங்கை காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை பாா்வையிட்டனா். இதில், வட்டார காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் டி. காஸ்டன் கிளிட்டஸ், நகரத் தலைவா் விமல் ஷொ்லின் சிங், பொருளாளா் பி. ரெவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிப்.21இல் போராட்டம்: இதையடுத்து காங்கிரஸ் நிா்வாகிகள் கூறியதாவது: குலசேகரம் பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக பேரூராட்சி பொதுச் சந்தையிலிருந்து குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு அகற்ற வேண்டும். மேலும் மீன் சந்தை அருகில் கழிவுகள் தேங்கும் தொட்டியை உடனே சுத்தம் செய்ய வேண்டும். இப்பணிகளைச் செய்யவில்லையெனில் இம்மாதம் 21 ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com