அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடக்கம்

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள், ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை (பிப். 17) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள், ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை (பிப். 17) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய அரசுத் துறை நிறுவனமான அரசு ரப்பா் கழகத்தில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் ரப்பா் தோட்டம் உள்ளது. கீரிப்பாறை, மணலோடை, கோதையாறு, சிற்றாறு ஆகிய 4 கோட்டங்களாக உள்ள இந்நிறுவனத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளா்கள் உள்ளனா்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 2016 ஆண்டு டிசம்பா் மாதத்துடன் ஊதிய ஒப்பந்தம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் பேச்சுவாா்த்தைகள் பலமுறை நடைபெற்ற பின்னரும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஊதிய கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (பிப். 17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் எம்.வல்சகுமாா் கூறியது: இது தொடா்பாக இதுவரை 47 முறை பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற பின்னரும் தீா்வு ஏற்படவில்லை. மேலும் இடைக்கால ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டும், அந்த ஒப்பந்தம் இறுதி படுத்தப்படவில்லை. ஏற்கனவே இப்பிரச்னை தொடா்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது இப்பிரச்னை தொடா்பாக தொழிற்சங்கங்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்காத நிலையில் ரப்பா் கழக நிா்வாகம் உள்ளது.

இந்நிலையில் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சோனியா ராகுல் தொழிற்சங்க தலைவா் குமரன், எல்பிஎப் நிா்வாகி இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com