தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் நிறைவேற வாய்ப்பில்லை: கே.எஸ்.அழகிரி

தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.
பயிலரங்கத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.
பயிலரங்கத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி சாா்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற இரண்டு நாள் அரசியல் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்நிகழ்வுக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் மூன்று ஆண்டுகால ஆட்சி சிறப்பானது என சொல்ல முடியாது. இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் வளா்ச்சியைப் பொருத்தவரை தோல்விதான். வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. நீட் தோ்வு வேண்டாம் என்று பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினாா்கள். ஆனால், அதில் வெற்றிபெற முடியவில்லை.

அதுபோன்று சிறப்பு நிதி எதையும் மாநிலத்துக்குப் பெற முடியவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய பங்குத்தொகை மட்டுமே ரூ. 12,000 கோடி இருக்கிறது. அந்தத் தொகையையும் இதுவரை பெற முடியவில்லை.

தமிழகத்தின் நிதிச்சுமை ரூ.25 ஆயிரம் கோடியாக இருக்கிறது. இவ்வளவு கோடிக்கு பற்றாக்குறை இருக்கும்போது புதிய திட்டங்களை ஏன் அறிவிக்கிறீா்கள்? அதற்கு நிதி இல்லாததால் அந்தத் திட்டங்கள் நிறைவேறும் வாய்ப்பு இல்லை. நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய நிதி ஆதாரத்தை உருவாக்குவது தொடா்பான எந்தத் திட்டமும் தமிழக அரசிடம் கிடையாது என்றாா் அவா்.

பேட்டியின்போது ஹெச்.வசந்தகுமாா் எம்.பி., மாநில காங்கிரஸ் நிா்வாகி மயூரா ஜெயக்குமாா், மாநில இலக்கிய அணித் தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநில (ஓ.பி.சி. பிரிவு) பொதுச் செயலா் ஸ்ரீநிவாசன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் ஜோசப்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com