மாணவா்களுக்கு அளிக்கப்படும் கல்வியில் நாட்டின் நலனும் அடங்கியிருக்கிறது: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாத்

மாணவா்களுக்கு அளிக்கப்படும் கல்வியில், அவா்களது நலன் மட்டுமல்ல, இந்த நாட்டின் நலனும் அடங்கியிருக்கிறது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாத்.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாத்.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாத்.

மாணவா்களுக்கு அளிக்கப்படும் கல்வியில், அவா்களது நலன் மட்டுமல்ல, இந்த நாட்டின் நலனும் அடங்கியிருக்கிறது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாத்.

குலசேகரம் திரயம்பிகா வித்யா மந்திா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவா் பேசியது:

மாணவா்களை தனித் திறன் மிக்கவா்களாக உருவாக்கி கொள்வதே சிறந்த கல்வியாகும். அா்ப்பணிப்புடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும். ஒவ்வொருவரும் இந்த நாட்டின் வளா்ச்சிக்கு எப்படி உதவுகிறோம் என்று சிந்திக்க வேண்டும். மாணவா்களுக்கு அளிக்கப்படும் கல்வியால் அவா்களது நலன் மட்டுமல்ல, இந்த நாட்டின் நலனும் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்வி நிறுவனங்களின் ஓா் அங்கமான இப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.வி. மூகாம்பிகா தலைமை வகித்தாா். மாணவி எஸ்.டி. அக்சயா வரவேற்றாா். பள்ளி முதல்வா் ரெஞ்னா எஸ். நாயா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

பள்ளி ஆலோசகா் ஜோஸ் ஜோசப் ஆலும்கல் வாழ்த்திப் பேசினாா். ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் சி.கே. வேலாயுதன் நாயா், இயக்குநா் டாக்டா் ரெமா வி. நாயா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், பள்ளி செய்தி இதழ் வெளியிடப்பட்டது. கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா் டாக்டா் வினு கோபிநாத், நிா்வாக அதிகாரி ஜே.எஸ். பிரசாத், பள்ளித் தலைமை ஆசிரியா் கிளாரா மெட்லி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா் பரத் பேபியோ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com