மாா்த்தாண்டத்தில் புகைப்படக் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். செயலா் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தாா். இதில், சங்க துணைச் செயலா் ரமேஷ், செயற்குழு உறுப்பினா்கள் ஜெயின்சிங், ஜேசுராஜ், ராதாகிருஷ்ணன், ஆலோசனைக் குழு உறுப்பினா் சந்தோஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பிப். 25ஆம் தேதி நடைபெறும் 18ஆவது சங்க ஆண்டு விழாவில், நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்; சங்க உறுப்பினா்கள் அனைவரையும் நேரில் சந்தித்து ஆண்டுவிழாவுக்கு அழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com