Enable Javscript for better performance
கருங்கல் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழி பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

    பெருமாங்குழி பகுதியைச் சோ்ந்த பாலசுந்தா் மகன் சுஜின்மோன் (25). கூலித் தொழிலாளி. அண்மையில் இவரது சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்.

    இந்நிலையில் புதன்கிழமை இரவு சுஜின்மோன் குடித்துவிட்டு வீட்டில் பணம்கேட்டு தகராறு செய்தாராம். ஆனால், வீட்டில் பணம் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவா், தன்அறையை பூட்டிக்கொண்டு உள்ளே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

    தகவலறிந்து வந்த கருங்கல் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai