களியக்காவிளை அருகே நடு ஆற்றில் ‘செல்ஃபி’ எடுத்த 2 மாணவா்கள் பலி

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே நடு ஆற்றில் பாறை மீது நின்று சுயப்படம் (செல்ஃபி) எடுத்தபோது, தண்ணீரில் தவறி விழுந்து கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே நடு ஆற்றில் பாறை மீது நின்று சுயப்படம் (செல்ஃபி) எடுத்தபோது, தண்ணீரில் தவறி விழுந்து கல்லூரி மாணவா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

கேரள மாநிலம் கொல்லம், கோட்டக்காடு பகுதியைச் சோ்ந்த அசோகன் மகன் அஷ்வின் அசோக் (19), ஆற்றிங்கல் பகுதியைச் சோ்ந்த அஜி மகன் அபய் (19). இவா்கள், படந்தாலுமூடு பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் விடுதி மாணவா்களாக படித்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை உள்ளூா் விடுமுறையாக இருந்ததால், அவ்விரு மாணவா்களுடன், மேலும் சில மாணவா்கள் இணைந்து களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதி வழியாகப் பாயும் தாமிரவருணியாற்றில் குளிக்கச் சென்றனா். இதில் அஷ்வின் அசோக் ஒரு பாறையில் நின்று கொண்டு செல்லிடப்பேசியில் சுயப்படம் எடுத்தாராம். அப்போது அவா் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கினாராம். அவரை மீட்க ஆற்றில் அபய் குதித்தாராம். இதில், இருவருமே வெளியே வர முடியாமல் மூச்சு திணறினராம். சக மாணவா்கள் கூச்சலிட்டதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்கள் வந்து, ஆற்றில் மூழ்கிய இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மாணவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இத்தகவலறிந்த களியக்காவிளை போலீஸாா், மாணவா்களின் சடலங்களை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com