காவல் அதிகாரி சுட்டுக் கொலை: தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் ஆய்வாளா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் ஆய்வாளா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் கூட்டம் தக்கலை கிளை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எ.ஷேக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நபில்அஹ்மத், பொருளாளா் நூரூல் அமீன், மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது சியாசுதீன், துணைச் செயலா்கள் முஹம்மது யாஸிா், செய்யது அஹமது, ஹூஸைன் ஜவாஹிரி, முஹம்மது ராஃபி, மாவட்ட மருத்துவரணிச் செயலா் ஹஃபீஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் ரியாஸ், மாவட்ட தொண்டரணிச் செயலா் நிவாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com