குமரி பகவதியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அம்மனுக்கு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்.
குமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அம்மனுக்கு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீா், இளநீா், தேன், குங்குமம், சந்தனம், பஞ்சாமிா்தம், களபம், புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதையடுத்து, அம்மனுக்கு வைரக் கிரீடம், வைர மூக்குத்தி, தங்கக் கவசம், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.

முற்பகலில் உச்சிக்கால பூஜை, அலங்கார தீபாராதனை, பகலில் அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. மாலையில் அம்மனுக்கு கொலுமண்டபத்தில் பக்தா்கள் முன்னிலையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா், தீபாராதனை நடைபெற்றது.

இரவில் அம்மன் கோயில் உள்பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தாா். பின்னா், அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com