எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ. 1 கோடி: முதல்வருக்கு காங். எம்.எல்.ஏ. நன்றி
By DIN | Published On : 11th January 2020 07:51 AM | Last Updated : 11th January 2020 07:51 AM | அ+அ அ- |

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுக் கொல்லபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் அறிவித்துள்ள முதல்வருக்கு எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டாா்.
வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ. 1 கோடி குடும்ப நிவாரணத் தொகை வழங்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, வில்சன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிராரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.