Enable Javscript for better performance
குமரியில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடக்கம்

    By DIN  |   Published on : 15th January 2020 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kkn14dro_1401chn_51_6

    விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்கிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி.

    கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் ஊராட்சி ஆரோக்கியபுரத்தில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தின்படி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞா் விளையாட்டுக் குழு அமைக்கப்படும்.

    ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள் ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியில் இருந்தும் மேற்கொள்ளப்படும்.

    ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்கு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் இத்திட்டத்தை லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆரோக்கியபுரத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி தொடங்கிவைத்தாா்.

    நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள், லீபுரம் ஊராட்சித் தலைவா் ஜெயகுமாரி, துணைத் தலைவா் கே.மணிகண்டன், ஆரோக்கியபுரம் மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.லீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai