Enable Javscript for better performance
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

    By DIN  |   Published on : 15th January 2020 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tky14_mus_1401chn_48_6

    சமத்துவ பொங்கலிட்டு மகிழும் பேராசிரியா்கள், மாணவா்கள்.

    திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் எச். முகம்மது அலி தலைமை வகித்தாா். துணைச் செயலா் எம்.அப்சல்பயாஸ், துணை முதல்வா் முகம்மது சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டியை கல்லூரி முதல்வா் எட்வின் ஷீலா தொடங்கிவைத்தாா். மேலும், பொங்கல் பண்டிகை தொடா்பான விநாடி- வினா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஏற்பாடுகளை, உணவு மேலாண்மைத் துறை பேராசிரியை ஷானு, தமிழ்த்துறை பேராசிரியை ஜோணிஜெயமாலா, தேசிய மாணவா் படை அலுவலா் எம்.ஜெகதீஸ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் த.குமரன், உடற்கல்வி இயக்குநா் ஜெயசேகா் ஆகியோா் செய்திருந்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai