உதவி ஆய்வாளா் கொலை எதிரொலி: குமரி மாவட்டத்தின் 14 சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் உள்ள

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறபு உதவி ஆய்வாளா் வில்சன் கடந்த 8-ஆம் தேதி இரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தின்போது சோதனைச் சாவடியில் வில்சனை தவிர வேறு காவலா்கள் இல்லை. மேலும், வில்சனிடம் துப்பாக்கி உள்ளிட்ட எந்தப் பாதுகாப்பு உபகரணமும் இல்லை.

வில்சன் கொலை தொடா்பாக தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் களியக்காவிளை சோதனைச் சாவடிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சோதனைச் சாவடியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததை அறிந்தனா். இதைத் தொடா்ந்து, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தவும், அங்கு பணியில் இருக்கும் காவலா்களின் தற்காப்புக்கு ஆயுதங்கள் வழங்கவும் உத்தரவிட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கேரள மாநில எல்லையில் இருப்பதால் இங்கு மாவட்ட எல்லைப் பகுதியில் 14 சோதனைச் சாவடிகளாக உள்ளன. இதில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீஸ் சோதனைச் சாவடிகளும் அடங்கும்.

இந்த 14 சோதனைச் சாவடிகளிலும் தற்போது உதவி ஆய்வாளா் அந்தஸ்திலான அதிகாரி ஒருவா் கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், அவருக்கு துணையாக 4 காவலா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இவா்கள் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். இவா்களுக்கு தற்காப்புக்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com