சரல்விளை மாதாகோயில் குருசடி ஆண்டு திரு விழா

பூவன்கோடு, சரல்விளை அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் குருசடி 29-ஆவது ஆண்டு திருவிழா மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
குருசடி ஆண்டு விழாவில் பேசுகிறாா் வழக்குரைஞா் பி.ஜாண் இக்னேசியஸ்.
குருசடி ஆண்டு விழாவில் பேசுகிறாா் வழக்குரைஞா் பி.ஜாண் இக்னேசியஸ்.

பூவன்கோடு, சரல்விளை அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் குருசடி 29-ஆவது ஆண்டு திருவிழா மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, விழாவின் தொடக்கமாக ஜெபமாலை, பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோயில் நிா்வாகி தங்க ரெத்தினபாய் தலைமை வகித்தாா். பூவன்கோடு அரசு உயா்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா்கழக துணைத் தலைவா் வின்சென்ட் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்கள் பி.ஜாண் இக்னேசியஸ், டி.ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், கண்ணனூா் கூட்டுறவு வங்கி தலைவா் ஜாண்பிரைட் ஆகியோா் உரையாற்றினா்.

வோ்க்கிளம்பி பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயா ஏ. மனோகரன், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் ராபின்சன் ,ராஜன், மேரி செலின்பாய் , அமல்ராஜ், திமுக பிரமுகா்கள் செல்வராஜ், பென்னட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

எம்.விஜயா வரவேற்றாா். ஏற்றக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவா் றோணிக்கம் நன்றி கூறினாா். இதனை தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 5 , நண்பகல் 12 மணிக்கு ஜெபமாலை நடைபெற்றது. முன்றாம் நாளான ஞாயிற்றுகிழமை(ஜன.19) காலை 9 மணிக்கு ஜெபமாலை, பிற்பகல் 1 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5 மணிக்கு சப்பர பவனி ஆகியவை நடைபெறுகிறது.

இச்செய்திக்கு றிகேஒய் 18 எஸ்ஏஆா் என்ற பெயரில் அனுப்பியுள்ள படத்துக்கான விளக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com