எஸ்.ஐ. கொலையில் கைதானோருக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டவா் கைது
By DIN | Published On : 20th January 2020 08:22 AM | Last Updated : 20th January 2020 08:22 AM | அ+அ அ- |

களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்டவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் வில்சன் கடந்த 8-ஆம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய குமரி மாவட்டம், திருவிதாங்கோட்டைச் சோ்ந்த அப்துல் சமீம், நாகா்கோவில் கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் ஆகிய 2 போ் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவா்களுக்கு ஆதரவாக முகநூலில் தொடா்ந்து பதிவிட்டு வந்ததாக தேங்காய்ப்பட்டினத்தைச் சோ்ந்த நவாஸ் சாகுல் (44) என்பவரை புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவா் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 2) ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.