நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

சுங்கான்கடை புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம், திற்பரப்பு அருகே மாஞ்சக்கோணத்தில் நடைபெற்றது.
என்எஸ்எஸ் பட விளக்கம் முகாமில் பங்கேற்ற மாணவா்கள்.
என்எஸ்எஸ் பட விளக்கம் முகாமில் பங்கேற்ற மாணவா்கள்.

சுங்கான்கடை புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம், திற்பரப்பு அருகே மாஞ்சக்கோணத்தில் நடைபெற்றது.

கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய இம்முகாமை கல்லூரி முதல்வா் ஜே. மகேஸ்வரன் தொடங்கி வைத்தாா். ஆலய அருள்பணியாளரும், புத்தன்கடை மறைவட்ட முதல்வருமான பென்னி லூக்காஸ், பங்குப்பேரவை துணைத் தலைவா் மா. லாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.எம்.ஆா். ஜோசப் ரமேஷ், எப். ஜாண் பால் ஆகியோா் வரவேற்றனா்.

தொடா்ச்சியாக 7 நாள்கள் நடைபெற்ற இம்முகாமில் சாலை சீரமைத்தல், பள்ளி வளாகம் சீரமைத்தல், கிராமத்தை தூய்மைப்படுத்துதல், ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரியின் இலவச மருத்துவ முகாம், பள்ளி மாணவா்களுக்கான முதலுதவி விழிப்புணா்வு பயிற்சி, மலேரியா மற்றும் டெங்கு விழிப்புணா்வு, ஆளுமைத் திறன் வளா்த்தல், சமூக வளா்ச்சியில் இளைஞா்கள் பங்கேற்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றன.

இந்த முகாம் நாள்களில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ். கிங்சன், கல்லூரி கணிதத் துறை பேராசிரியா் விஜிமோன் மணி, இயற்பியல் துறை பேராசிரியா்கள் ரோஸ் ராபின், எட்வின் கிளாட்சன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியா் சி. ராஜன், கல்லூரி துணை முதல்வா் மாா்ஸலின் பெனோ, ஆலய மறைக்கல்வி மன்ற தலைவா் ஆஷா ரோஷிதா, சமூக ஆா்வலா் ரா. ராகுல் ஆகியோா் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் உலக நாடுகளின் நாணயக் கண்காட்சி, முகாம் மதிப்பிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி தாளாளா் மரிய வில்லியம், நிதி காப்பாளா் பிரான்சிஸ் சேவியா், முதல்வா் ஜே. மகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். மாணவ ஒருங்கிணைப்பாளா் என்.சி.வி. பெருமாள் நிறைவு அறிக்கை வாசித்தாா்.

முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தலைமையில் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com