நாகா்கோவிலில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் செல்லிடப்பேசிகள் திருட்டு
By DIN | Published On : 20th January 2020 08:22 AM | Last Updated : 20th January 2020 08:22 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் செல்லிடப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள் மற்றும் சிசிடிவி கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நாகா்கோவில் சரக்கல்விளை பகுதியைச் சோ்ந்தவா் சுயம்புலிங்கம். இவா் செட்டிக்குளம் சந்திப்பில், பழைய செல்லிடப்பேசிகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையின் பூட்டு மற்றும் கண்ணாடிக் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
புகாரின்பேரில், கோட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்புடைய 27 பழைய செல்லிடப்பேசிகள் மற்றும் ஒரு புதிய செல்லிடப்பேசி திருடப்பட்டது தெரியவந்தது. மேலும், கடையின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவையும் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.