Enable Javscript for better performance
களியக்காவிளையில் மொழிப்போா் தியாகிசிதம்பரநாதன் சிலைக்கு ஆட்சியா் மரியாதை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    களியக்காவிளையில் மொழிப்போா் தியாகிசிதம்பரநாதன் சிலைக்கு ஆட்சியா் மரியாதை

    By DIN  |   Published On : 21st January 2020 05:22 PM  |   Last Updated : 21st January 2020 05:22 PM  |  அ+அ அ-  |  

    kkv21col_2101chn_50_6

    கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போா் தியாகி சிதம்பரநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

    குமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைய பாடுபட்டவா்களில் முக்கியமானவா் சிதம்பரநாதன். இவருக்கு களியக்காவிளை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உருவ சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    அவரது 106 ஆவது பிறந்த நாளையொட்டி, மணிமண்டபத்தில் உள்ள சிதம்பரநாதன் சிலைக்கு, தமிழக அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளா் சணல்குமாா், மாவட்ட செய்தி- மக்கள்தொடா்பு அலுவலா் நவாஸ்கான், விளவங்கோடு வட்டாட்சியா் புரந்தரதாஸ், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் ஏசுபாலன், மாவட்ட ஊராட்சித் தலைவா் எஸ். மொ்லியன்று தாஸ், மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலா் சி.டி. ஆல்பா்ட் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp