முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
இறச்சகுளம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
By DIN | Published On : 27th January 2020 01:21 AM | Last Updated : 27th January 2020 01:27 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சாா்பில், 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தோவாளை ஊராட்சி ஒன்றியம், இறச்சகுளம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் எல்.நீலகண்டஜெகதீஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே பேசுகையில், கிராமசபைக் கூட்டத்தில் அளித்துள்ள மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிா்த்தல்; திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
யோகா விருது பெற்ற பயோனியா் பள்ளி, 4ஆம் வகுப்பு மாணவி இ.எஸ்.ஸ்வஸ்திகாவை ஆட்சியா் கௌரவித்தாா்.
கூட்டத்தில், எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவா் இ.சாந்தினி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் எல்.மகாராஜ பிள்ளை உள்ளிட்டோா் கலந்துகொண்டு, சுகாதார உறுதிமொழி ஏற்றனா்.
இதில், உதவி இயக்குநா்(ஊராட்சிகள்)பி.எ.சையது சுலைமான், நாகா்கோவில் கோட்டாட்சியா் அ.மயில், அறங்காவலா் குழு உறுப்பினா் கே.பாக்கியலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தோவாளை வட்டார வளா்ச்சி அலுவலா் இங்கா்சால் நன்றி கூறினாா்.