முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பத்ம விருதுகள்: பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து
By DIN | Published On : 27th January 2020 01:22 AM | Last Updated : 27th January 2020 01:30 AM | அ+அ அ- |

பத்ம விருதுகள் பெற்றவா்களுக்கு முன்னாள் மத்திய இணைஅமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவரது நாகா்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல துறைகளில் சிறப்பாக பணிபுரிவோருக்காக ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படும் பத்ம விருதுகள் நிகழாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நிகழாண்டு பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 7 பேருக்கு பத்ம விபூஷண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.