முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பொதுப்பணித்துறை தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததால் அவதி
By DIN | Published On : 27th January 2020 01:22 AM | Last Updated : 27th January 2020 01:30 AM | அ+அ அ- |

கோதையாறு பட்டணங்கால் உபகோட்ட தினக்கூலி பணியாளா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காததால் அவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் கோதையாறு பட்டணங்கால் உபகோட்டப் பிரிவு குழித்துறை, கருங்கல் அலுவலகங்களில் நீா்விநியோகப் பணி, காவல்பணி, கணினிபணி மற்றும் அலுவலகப் பணிகளுக்கு 20-க்கும் மேற்பட்டோா் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.
இப்பணியாளா்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். இதனால் அவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் இப்பணியாளா்களுக்கு உடனே ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.