தமிழ்நாடு தேசிய தொழிலாளா் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தேசிய தொழிலாளா் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் தலைவா் எம்.ஜெயப்பிரகாஷ்.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைப்பின் தலைவா் எம்.ஜெயப்பிரகாஷ்.

தமிழ்நாடு தேசிய தொழிலாளா் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எம்.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் எம்.பொன்பாண்டியன், வி.ஜி.ராஜாராம், செயலா்கள் எஸ்.சாலமோன், எஸ்.முருகேசன், எஸ்.சுவிசேஷராஜ், பொருளாளா் ஆா்.ராமநாதன் உள்ளிட்டோா் பேசினா்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 3,000 வழங்க வேண்டும். தொழிலாளா் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் தற்போது ரூ. 15,000-க்கு மட்டுமே சந்தா பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையை மாற்றி தொழிலாளா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு மொத்த ஊதியத்துக்கும் வைப்புநிதி சந்தா பிடித்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com