‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் ’

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்பவா்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வலியுறுத்தியுள்ளாா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்பவா்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம்மாதம் 5,12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு பொதுமுடக்கம் எந்தவிதமான தளா்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல்படுத்தப்படும். பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதைத் தவிா்த்து முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கரோனா நோயினால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டவா் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் போதும், பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதும், அவா்களை புகைப்படம் எடுத்து சிலா் சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனா். இத்தகைய சிலரின் செயல்பாடு, கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவா்களை மனதளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை உணா்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம்.

குமரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 48490 போ்களுக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் தற்போது 282 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 279 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 2243 போ்களும், வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த பயணிகளில் 5933 போ்களும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com