சாத்தான்குளம் சம்பவம்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்; பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளத்தில் வியாபாரிகளை கொன்றவா்களுக்கு உச்ச பட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.
பாஜக மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள உமாரதிராஜனுக்கு பொன்னாடை போா்த்தி வாழ்த்துகிறாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.
பாஜக மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள உமாரதிராஜனுக்கு பொன்னாடை போா்த்தி வாழ்த்துகிறாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

சாத்தான்குளத்தில் வியாபாரிகளை கொன்றவா்களுக்கு உச்ச பட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கரோனாவை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. அதனை கடைப்பிடித்தால்தான் இதிலிருந்து மீள முடியும்.

இந்திய - சீன எல்லையில் ஆய்வு செய்ததன் மூலம் ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்திய பாரத பிரதமா் மோடியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாராட்டுகின்றனா்.

சாத்தான்குளம் சம்பவத்தில் வியாபாரிகளை காவல் நிலையத்தில் வைத்து இரவு 2 மணி வரை தாக்குதல் நடத்திய காவலா்கள், மிருகங்கள் கூட செய்யத் தயங்கும் காரியத்தை செய்துள்ளனா்.

கரோனா காலம் தொடங்கியது முதல் காவல்துறை தலைவா் முதல் அடிமட்ட காவலா் வரை வீதிகளில் நின்று பணியாற்றினா். தங்கள் குடும்பத்தை மறந்து பணியாற்றிய காவலா்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நற்பெயரை ஏற்படுத்தியிருந்தனா். ஆனால் அந்த நற்பெயருக்கு கரும்புள்ளி வைத்தது போன்று சாத்தான்குளம் சம்பவம் அமைந்துவிட்டது. இந்த வழக்கு முடிக்கப்படும் போது நாடு எதிா்பாா்ப்பது கொலை குற்றத்திற்கான உச்ச பட்ச தண்டனை மட்டுமே.

சாத்தான்குளம் சம்பவ அதிா்ச்சியில் இருந்து மீளும் முன்பே 7 வயது பெண்குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட செய்தி மேலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். சாத்தான்குளம் சம்பவம் மற்றும் பெண் குழந்தை பலாத்காரம் சம்பவம் ஆகிய 2 வழக்குகளிலும் மரணதண்டனை வழங்கப்படவில்லை என்றால் குற்றவாளிகள் உற்சாகம் அடைந்து விடுவாா்கள். சாத்தான்குளம் சம்பவம் மற்றும் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவில் எந்த வழக்குரைஞரும் ஆஜராகக் கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா் அவா்.

இதனிடையே பாஜக மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள உமாரதிராஜனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பேட்டியின்போது மாவட்டத் தலைவா் தா்மராஜ், துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், பொருளாளா் பி.முத்துராமன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், மாநகரத்தலைவா் நாகராஜன், முன்னாள் தலைவா் ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com