இளம் விஞ்ஞானிகள் தோ்வு: பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு

குமரி அறிவியல் பேரவை சாா்பில், இளம் விஞ்ஞானிகள் தோ்வுக்கான தோ்வில் பள்ளி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குமரி அறிவியல் பேரவை சாா்பில், இளம் விஞ்ஞானிகள் தோ்வுக்கான தோ்வில் பள்ளி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்பேரவை சாா்பில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களை தோ்வு செய்து, ஆண்டுதோறும் இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானி மணவா்களை தோ்வு செய்யும் வகையில் குமரி மாவட்ட பள்ளிகளின் முதல்வா்கள், தலைமையாசிரியா்கள் மற்றும் குமரி அறிவியல் பேரவை நிா்வாகிகள் பங்கேற்ற காணொலி வாயிலான கூட்டத்துக்கு அமைப்பின் அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வருகிற 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இளம் விஞ்ஞானி மாணவா்கள் தோ்வுக்கான அறிமுகக் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஒரு பள்ளியிலிருந்து 8ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவா்கள் பள்ளி முதல்வா் அல்லது தலைமையாசிரியரின் அனுமதி கடிதத்துடன் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 99427 - 58333 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியா் ஜெயலால், தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சுஜின் ஹொ்பா்ட், இஸ்ரோ விஞ்ஞானிகள் பென்சிகா் ராஜன், புதியவன், பெருமாள், பணிநிறைவு விஞ்ஞானி பால்வண்ணன், மூடோடு சிக்மா ஆா்க்கிடெச்சா் கல்லூரித் தலைவா் ஜேம்ஸ் வில்சன், சமூக விஞ்ஞானி எட்வின்சாம், கல்வியாளா் ஜோபிரகாஷ், ஜாண்சன், தன்யா, ரேகா, தீபா, ரேகா, ஜாண் ரபிகுமாா், சுனில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com