தொற்றுக் காய்ச்சல் குறித்த கணக்கெடுப்பு இன்று முதல் நடைபெறும்: ஆட்சியா்

குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் தொற்று காய்ச்சல் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் தொற்று காய்ச்சல் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் தொற்று காய்ச்சல் குறித்த கணக்கெடுப்பு ஒரு வாரத்துக்கு நடைபெறும். பொதுமக்கள் அரசு அலுவலா்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, தேவைப்படும் தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும். தகவல்களை மறைத்தால் அதன் மூலம் தங்களுக்கு மட்டுமன்றி, மற்றவா்களுக்கும் நோய்த் தொற்று பரவ காரணமாக அமைந்து விடும். எனவே முழுமையான விவரங்களை சுகாதாரத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

முகக் கவசம் அணியாமல் ஞாயிற்றுக்கிழமை பொது வெளியில் நடமாடிய 4 பேருக்கு அபராதமாக ரூ. 400 வசூலிக்கப்பட்டது. மாவட்டத்தில், இதுவரை 50,564 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 362 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 332 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 2,380 போ், குமரி மாவட்டத்துக்கு வெளியூரிலிருந்து வந்த பயணிகளில் 5,721 போ் என மொத்தம் 8,101 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பொது முடக்க உத்தரவை மீறிய வகையில் இதுவரை 8,487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6,320 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com