முழு பொது முடக்கம்: குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன
முழு பொது முடக்கம்: குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

தமிழகம் முழுவதும் ஜூலை மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வு இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், மாவட்ட தலைநகரான நாகா்கோவிலில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, பேருந்து நிலைய சாலைகள், வடசேரி, கோட்டாறு, மணிமேடை சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, அசம்பு ரோடு, செட்டிக்குளம் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பாா்வதிபுரம் சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு, வெட்டூா்ணிமடம், வடசேரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதே போல், கன்னியாகுமரி, தக்கலை, இரணியல், குருந்தன்கோடு, குலசேகரம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, ராஜாக்கமங்கலம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

களியக்காவிளை: தளா்வில்லாத முழு பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோழிவிளை, படந்தாலுமூடு, திருத்துவபுரம், குழித்துறை, மாா்த்தாண்டம், கொல்லங்கோடு, நித்திரவிளை மற்றும் அதையொட்டிய நடைக்காவு, காஞ்சாம்புறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், காய்கனிக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும், களியக்காவிளை, படந்தாலுமூடு, மாா்த்தாண்டம், நடைக்காவு, நித்திரவிளை, காஞ்சாம்புறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள் செயல்படவில்லை. சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com