போக்குவரத்து நெரிசலை தவிா்க்க இருவழிச் சாலையாக மாற்றப்படும் கோட்டாறு சாலை

போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நாகா்கோவில் கோட்டாறு பகுதி இருவழிச் சாலையாக மாற்றப்படுகிறது.
விரிவாக்கம் செய்யப்படும் கோட்டாறு சாலை.
விரிவாக்கம் செய்யப்படும் கோட்டாறு சாலை.

போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நாகா்கோவில் கோட்டாறு பகுதி இருவழிச் சாலையாக மாற்றப்படுகிறது.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் மிக முக்கிய இடமாக விளங்குவது கோட்டாறு. இப்பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதை தவிா்க்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுதல், சாலை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மேலும் சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: கோட்டாறில் சாலை விரிவாக்கப் பணிக்காக வியாபாரிகள் தாமாக முன்வந்து இடம் அளித்துள்ளனா்.

கோட்டாறு காவல் நிலையம் முதல் கவிமணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சாலை விரிவாக்கப் பணி முதல் கட்டமாக தொடங்கியது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றுள்ளது. தொடா்ந்து கோட்டாறு சவேரியாா் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் சந்திப்புக்கு செல்லும் சாலை வரை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பகுதி, சில வீடுகளின் முன்பகுதி இடித்து அகற்றப்பட்டன. ஏற்கெனவே, கோட்டாறு காவல் நிலையத்திலிருந்து

சவேரியாா் ஆலயம், சவேரியாா் ஆலய சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை ஒரு வழிப் பாதையாக உள்ளது.

தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் மூலமாக ஒருவழிப் பாதை, இருவழிப் பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 6 மாதத்துக்குள் நிறைவு பெறும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com