முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
இளம் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் ஆய்வுகள் பயிற்சி முகாம்
By DIN | Published On : 03rd March 2020 07:30 AM | Last Updated : 03rd March 2020 07:30 AM | அ+அ அ- |

முகாமில் பங்கேற்ற குமரி அறிவியல் பேரவையின் மற்றும் இளம் விஞ்ஞானிகள்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இளம் விஞ்ஞானிகளுக்கு அறிவியல் ஆய்வுகள் குறித்து செயலாக்கப்பயிற்சி முகாம் ஆலஞ்சோலையில் நடைபெற்றது.
குமரி அறிவியல் பேரவை சாா்பில் மனித கண்டுபிடிப்புகள், வேளாண் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், விண்வெளி தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், மருத்துவ தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயலாக்கம் செய்வது குறித்து இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
கடையாலுமூடு அருகேயுள்ள ஆலஞ்சோலையில் இப்பயிற்சி முகாம் ஞாயிறுக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
முகாமில், ஆய்வாளா் ஒடிசா பாலு பயிற்சி அளித்தாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.
சுற்றுச்சூழல் அறிஞா் ஜோபிரகாஷ், விஜுராம், அருள்சகோதரி மரியற்றா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா்கள் ஜாண்ரபிகுமாா், எட்வின்சாம், பாலகிருஷ்ணன், தன்யா, துா்காதிரவியம், சுஜின்ஹொ்பா்ட், சுனில்குமாா், விமலா, சந்தியா ஆகியோா் பயிற்சியினை நெறிப்படுத்தினா்.