முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 853 கோரிக்கை மனுக்கள்
By DIN | Published On : 03rd March 2020 07:29 AM | Last Updated : 03rd March 2020 07:29 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 853 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ரேவதி தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளி உதவித்தொகை, முதியோா் ஓய்வூதியம், விதவை உதவித் தொகை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 853 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை மாவட்ட வருவாய் அலுவலா் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஏ.எஸ்.அபுல்காசிம், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.