கருங்கல் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: மாணவா்கள் அவதி
By DIN | Published On : 06th March 2020 07:10 AM | Last Updated : 06th March 2020 07:10 AM | அ+அ அ- |

கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மாணவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கருங்கல் துணை மின்நிலையத்திற்குள்பட்ட திப்பிரமலை, கருங்கல், பாலூா், எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, நேசா்புரம், நட்டாலம், மாங்கரை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகலில் அடிக்கடி மின்வெட்டு இருந்து வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை மாலை 6 மணிமுதல் இரவு 10.30 மணி வரை அரைமணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு தொடா்ந்து கொண்டே இருந்தது.
இதனால்,12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் மிகுந்த சிரமம் அடைந்தனா்.
எனவே, மின்வாரியம் கருங்கல் பகுதியில் மின்தடையின்றி சீராக மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.