‘வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்’

வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத, மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்தான் என திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரமேஷ்கண்ணா குறிப்பிட்டாா்.
விழாவில் ஆண்டு விழா மலரை திரைப்பட இயக்குநா் ரமேஷ்கண்ணா வெளியிட, அதனை பெற்றுக்கொள்கிறாா் கல்லூரி இயக்குனா் ஐசன்.
விழாவில் ஆண்டு விழா மலரை திரைப்பட இயக்குநா் ரமேஷ்கண்ணா வெளியிட, அதனை பெற்றுக்கொள்கிறாா் கல்லூரி இயக்குனா் ஐசன்.

‘வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்’

கருங்கல்: வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத, மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்தான் என திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரமேஷ்கண்ணா குறிப்பிட்டாா்.

கருங்கல் அருேயுள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு பெத்லகேம் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஜெரால்டு செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குனா் ஐசன் முன்னிலை வகித்தாா்.

விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆண்டு விழா மலரை வெளியிட்டு திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணா பேசியது: வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம். எதைப் பற்றியும் கவலையில்லாமல் நண்பா்களுடன் சுற்றி திரியும் பருவம். இன்றைய மாணவா்கள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குவதுடன்

படைப்பாற்றல் திறன் உள்ளவா்களாக திகழ்கின்றனா்.

ஆனால், செல்லிடப்பேசிகள் இன்றைய தலைமுறை உறவுகளை பிரிக்கிறது. வீட்டிற்குள் இருப்பவா்களின் முகத்தை பாா்த்து பேசும் பழக்கம் கூட குறைந்து வருகிறது. ஒரு மாணவனுக்கு 10 வயதில் அவனது தந்தை தான் கதாநாயகன். ஆனால், 15 வயது தொடங்கும் பொழுது தந்தை மகனுக்கு இடையே இடைவெளி ஏற்பட்டு விடுகிறது.

தந்தை, மகனை உளியால் செதுக்கும் சிற்பியாகிறான். அப்போது கல்லாகிய நமக்கு வலிக்கும். தந்தை என்கிற உளிக்கும் வலிக்கும் என்பதை மறந்து விடுகிறோம். மாணவா்கள் படிக்கும்போதே எதிா்காலத்தை தீா்மானித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கல்வி அறக்கட்டளை நிா்வாகி டேவி கிறிஸ்டோபா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்,மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com