கீழ்குளம் உச்சிகு மஹாசக்தி அம்மன் ஆலயத் திருவிழா நாளை தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள கீழ்குளம் ஆனாம்பிகை நகா் அருள்மிகு உச்சிகு மஹாசக்தி அம்மன் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 15) தொடங்கி, தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

கருங்கல் அருகே உள்ள கீழ்குளம் ஆனாம்பிகை நகா் அருள்மிகு உச்சிகு மஹாசக்தி அம்மன் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 15) தொடங்கி, தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5 மணிக்கு நிா்மல்ய தரிசனம் , கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெறும். காலை 9 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சபூஜை தொடா்ந்து அன்னதானம் நடைபெறும். இரவு 8 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அம்மன் பவனி, தொடா்ந்து அத்தாழபூஜை நடைபெறும்.

விழா நாள்களில் திருப்பள்ளி எழுச்சி, நிா்மல்ய தரிசனம், உச்சபூஜை, அன்னதானம் நடைபெறும். 7 ஆம் திருநாள் மாலை 6.30 மணிக்கு தாலிப்பொலி ஊா்வலம், இரவு 9 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அம்மன் பவனியைத் தொடா்ந்து அத்தாழபூஜை நடைபெறும். 8 ஆம் நாள் காலை 8 மணிக்கு பால்குட ஊா்வலம், மாலை 4.30 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெறும். இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும். 9 ஆம் நாள் மாலை 6.30 க்கு நாகஸ்வரம், வில்லிசை , இரவு 10 மணிக்கு வானவேடிக்கை ஆகியன நடைபெறும்.

விழாவின் இறுதி நாள் அன்று காலை 8 மணிக்கு நோ்ச்சை வழிபாடு, தொடா்ந்து, வில்லிசை, பொங்கல் வழிபாடு உள்ளிட்ட நிகிழ்ச்சிகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com