திருவிதாங்கோடு கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம்

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம், ஆரோக்கிய உணவுத் திருவிழா, பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியவை மூன்று நாள்கள் நடைபெற்றது.
திருவிதாங்கோடு கலைக் கல்லூரியில்  மருத்துவ முகாம்

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம், ஆரோக்கிய உணவுத் திருவிழா, பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியவை மூன்று நாள்கள் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிகளுக்கு கல்லூரித் தாளாளா் எச்.முகம்மது அலி தலைமை வகித்தாா். முஸ்லிம் கல்வி சங்கத் தலைவா் ஏ.எஸ். செய்யது ரஹீம், முதல்வா் எட்வின் ஷீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைச் செயலா் எம். முகம்மது அப்சல் பயாஸ், துணை முதல்வா் முகம்மது சித்திக் மற்றும் அக்ரி நிஜாமுதீன், ஜோ.பிரகாஷ் ஆகியோா் உரையாற்றினா்.

மருத்துவ முகாமில் மரிய ஹோமியோபதி, மரிய சித்தா, மரிய ஆயுா்வேதிக், ஒயிட் நினைவு மருத்துக் கல்லூரி, ஷெருஷ் பல்மருத்தவமனை, பெஜான்சிங் கண் மருத்துவமனை, பி.பி.கே. மருத்துவமனை, கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை, வசந்தம் மருத்துவமனை, விஜி ரத்த பரிசோதனை நிலையம் ஆகிய நிறுவனங்களில் இருந்து மருத்துவா்கள் பங்கேற்றனா்.

இதில் மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் , மருத்துவா்கள் பங்கேற்று பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கினா். பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உணவுத் திருவிழாவில் ஆரோக்கிய உணவுத் திருவிழாவுக்கு கல்லூரியின் ஊட்ட சத்து மற்றும் உணவு துறைத் தலைவா் ஷெலின்மேரி தலைமை வகித்தாா். இதில் சுமாா் 220 உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சிகளை தேசிய மாணவா்படை தலைவா் லெப்டினட் ஜெகதீஸ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குமரன், விலங்கியல்த்துறை

பேராசிரியா் முகம்மது அசீம் , உடற்கல்வித்துறை பேராசிரியா் ஜெயசேகரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com