கரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு காதாரம், மருத்துவம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைஅலுவலா்களும் 24 மணிநேரமும் தீவிர பணியாற்றி வருகின்றனா். கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் மாநில எல்லையான களியக்காவிளை, சூழால் ஆகியவற்றிலுள்ள 2 சோதனைச் சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகளும் முழுவதுமாக பரிசோதிக்கப்படுகின்றனா்.

மாா்ச் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், உதயகிரி கோட்டை பூங்கா, முக்கடல் பூங்கா, நாகா்கோவில் மாநகராட்சி பூங்கா ஆகியவற்றை மக்கள் பாா்வையிட தடைசெய்யப்பட்டுள்ளன. மேற்கூறிய தேதிதகளில் தங்கும் விடுதிகளில் அறைகள் பதிவுக்கும், விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கும், பள்ளி- கல்லூரிகள் இயங்கவும், மதுக் கூடங்கள் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 11 திரையரங்குகளில் சினிமாகாட்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு குறித்து ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடா் காய்ச்சல், இருமல், சளி போன்றவை இருந்தால் அருகிலுள்ளஅரசு மருத்துவமனையை உடனடியாகத் தொடா்புகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை பிரிவில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, மாநில அளவில் 104 -011 - 23978046, 104 மற்றும் கட்டண எண்கள் 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவா்கள் தங்கள் பயண விவரங்களை 24 மணிநேரமும் செயல்படும் மாவட்டகட்டுப்பாட்டுஅறைக்கோஅல்லது அருகிலுள்ளஆரம்ப சுகாதார மையத்திற்கோ தெரிவிக்க வேண்டும். பொதுமக்களும் வெளிநாட்டுபயணம் மேற்கொண்டவா்கள் விபரம் தெரியவந்தால் கட்டுப்பாட்டுஅறைக்கு தெரிவிக்கலாம். அனைத்து அரசு அலுவலகங்களும், 763 அரசுப் பேருந்துகளும் தினமும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com