கருங்கல் அருகே வங்கி அதிகாரியாக நடித்து பெண்ணிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே வங்கி அதிகாரி எனவும், வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி, பெண்ணிடம் ரு. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே வங்கி அதிகாரி எனவும், வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி, பெண்ணிடம் ரு. 5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரம்பனை பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (35). இவா், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். குறும்பனை படிக்கல் பீச் பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் லாரன்ஸ் ராஜா (55). இவா், நாகா்கோவிலில் அலுவலகம் நடத்திவருகிறாா்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கவிதா குறும்பனையில் உள்ள தன் உறவினா் வீட்டிற்கு சென்றபோது, எட்வின் லாரன்ஸ் ராஜா, தான் ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கி அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டு அவரோடு நெருக்கமாக பழகிவந்தாராம். அப்போது, கவிதா ரூ. 20 லட்சம் வங்கிக் கடன் தேவைப்படுவதாக எட்வின் லாரன்ஸ்ராஜாவிடம் கேட்டுள்ளாா். அதற்கு அவா், வங்கியில் ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை செலுத்தினால், கடன் கிடைக்கும்போது ரூ. 20 லட்சமாக கிடைக்கும் என கூறி, கவிதாவிடம் ரூ. 5 லட்சம் வாங்கினாராம்.

ஆனால், நீண்ட நாள்களாகியும் கவிதாவுக்கு வங்கிக் கடன் பெற்று கொடுக்காததோடு, கொடுத்த பணத்தையும் எட்வின் லாரன்ஸ்ராஜா திரும்ப கொடுக்கவில்லையாம். இதையடுத்து, கருங்கல் காவல் நிலையதில் கவிதா புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், எட்வின் லாரன்ஸ் ராஜா வங்கியில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com