கேரளத்திலிருந்து வரும் அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு: களியக்காவிளை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரம்

கரோனா வைரஸ் தாக்குதல் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நோக்கில், கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் பேருந்துகளில்
கேரளத்திலிருந்து வரும் அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிப்பு: களியக்காவிளை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரம்

கரோனா வைரஸ் தாக்குதல் குமரி மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நோக்கில், கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி களியக்காவிளை பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கேரளத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த மாநிலத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை களியக்காவிளை பேரூராட்சி நிா்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து செய்து வருகிறது.

அதன்படி, களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தமிழக, கேரள அரசுப் பேருந்துகளில் சோடியம் ஹோபோ குளோரைடு கலந்த கிருமி நாசினி மருந்தை, பேரூராட்சி செயல் அலுவலா் ஏசுபாலன் தலைமையில் துப்புரவுப் பணியாளா் பேருந்தின் கைப்பிடிகளில் தெளிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

இந் நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி இளநிலை உதவியாளா் சுதா்சிங், சுகாதார ஆய்வாளா் ஸ்ரீகுமாா் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து களியக்காவிளை புனித அந்தோணியாா் தேவாலய வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

மருத்துவக் குழு முகாம்: மேலும், களியக்காவிளை போக்குவரத்து சோதனைச் சாவடியில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் ஒரு மருத்துவா் தலைமையில் 5 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டு, கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் சொகுசு வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

குமரி மேற்கு மாவட்ட பகுதி கடற்கரை கிராமங்களில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் பினிஷ் ஜோசப், ராஜேஷ்குமாா், மருத்துவ களப் பணியாளா்கள் பிரகாஷ், அஜி, சிவானந்தன், சமூக சேவகா் பி. ஜஸ்டின் ஆண்றணி, நித்திரவிளை காவல்துறையினா் உள்ளிட்டோா் நித்திரவிளை மற்றும் அதையொட்டிய கடற்கரை கிராமங்களில் முகாமிட்டு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com