முட்டத்தில் 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

முட்டம் பேருந்து நிலையத்தில் கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

முட்டம் பேருந்து நிலையத்தில் கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரி ஜான்கெனி தலைமையில் வருவாய் ஆய்வாளா் செய்யது அலி மற்றும் ஊழியா்கள் தக்கலை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது முட்டம் கடற்கரை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கேரள மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அதிகாரிகள் முட்டம் கடற்கரை பகுதிக்கு சென்றனா்.

அங்கு அவா்கள் சோதனை செய்த போது பேருந்து நிலையம் பகுதியில் நின்ற 2 போ் தப்பி ஓடினா். அதிகாரிகள் அங்கு சென்று பாா்த்தபோது 16 சாக்கு மூட்டைகளில் 1350 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குளச்சலில் உள்ள கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com