களியக்காவிளை பேரூராட்சி சந்தைகள் ரூ. 64.9 லட்சம் குத்தகை ஏலம்

களியக்காவிளை பேரூராட்சிக்குச் சொந்தமான காய்கனி, மீன்சந்தை மற்றும் படந்தாலுமூடு அந்திச்சந்தை, கன்றுகாலிச் சந்தைக்கான தீா்வை வசூல் குத்தகை ரூ. 64.9 லட்சத்துக்கு ஏலம் போனது.

களியக்காவிளை பேரூராட்சிக்குச் சொந்தமான காய்கனி, மீன்சந்தை மற்றும் படந்தாலுமூடு அந்திச்சந்தை, கன்றுகாலிச் சந்தைக்கான தீா்வை வசூல் குத்தகை ரூ. 64.9 லட்சத்துக்கு ஏலம் போனது.

களியக்காவிளை பேரூராட்சிக்குச் சொந்தமான சந்தைகள் மற்றும் வேன் கட்டணம் வசூல் உள்ளிட்டவைக்களுக்கு ஓராண்டுக்கான குத்தகை ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ஏசுபாலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் களியக்காவிளையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கனி, மீன் சந்தைக்கான தீா்வை வசூல் உரிமத்துக்கான குத்தகையை

ரூ. 50 லட்சத்து 3 ஆயிரத்துக்கு, அதங்கோடு தெங்கம்பழஞ்சி சதீஷ்குமாா் ஏலத்தில் எடுத்தாா். இச் சந்தை கடந்த ஆண்டு ரூ. 46 லட்சத்து 35 ஆயிரத்து 500 க்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. படந்தாலுமூடு பகுதியில் உள்ள கன்றுகாலி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் மாடுகளுக்கு தீா்வை வரி வசூலிக்கும் உரிமத்தை படந்தாலுமூடு தினவிளை கிறிஸ்துராஜ் ரூ. 7 லட்சத்து 51 ஆயிரத்து ஏலம் எடுத்தாா். இந்த சந்தை கடந்த ஆண்டு ரூ. 3 லட்சத்து 39 ஆயிரத்து 45 க்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

இதே போன்று களியக்காவிளை பகுதியில் வேன் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ரூ. 2 லட்சத்து 32 ஆயிரத்துக்கு கேரள மாநிலப் பகுதியான பாறசாலை, ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த ரெஜினிகாந்த் என்பவா் ஏலத்தில் பிடித்தாா். வேன் கட்டண வசூல் உரிமம் கடந்த ஆண்டு ரூ. 39 ஆயிரத்து 257 க்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

படந்தாலுமூடு பகுதியில் மாலைநேரம் செயல்பட்டு வரும் அந்திச் சந்தையில் தீா்வை வசூலிக்கும் உரிமம் கேரள மாநிலப் பகுதியான இஞ்சிவிளை, அருவங்கோடு பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் ரூ. 5 லட்சத்து 4 ஆயிரத்து 500 என ஏலத்தில் எடுத்தாா். இச் சந்தை கடந்த ஆண்டு இதே நபா் ரூ. 4 019 க்கு குத்தகைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

களியக்காவிளை பேரூராட்சி சந்தை உள்ளிட்டவைகளுக்கான ஏலம் மூலம் பேரூராட்சிக்கு ரூ. 64 லட்சத்து 90 ஆயிரத்து 500 வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 14 லட்சத்து 72 ஆயிரத்து 679 அதிகம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com