குமரி மாவட்ட கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய மாா்ச் 31 வரை தடை

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டு மாா்ச் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய மாா்ச் 31 வரை தடை

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டு மாா்ச் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றான கோயில்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மக்கள் அதிகம் கூடும் கோயில்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகம முறைகளின்படி வழக்கமான பூஜைகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகா்கோவில் நாகராஜா கோயிலில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன. ஆனால் கோயிலின் 2 வாயில்களிலும் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கோயிலில் பூஜை செய்யும் மேல்சாந்திகள் மற்றும் ஊழியா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தரிசனத்துக்கு வந்த பக்தா்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதே போல் , கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயில், குழித்துறை மகாதேவா் கோயில், குமாரகோயில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில், இடா்தீா்த்த பெருமாள் கோயில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில், மண்டைக்காடு இசக்கியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் அடைக்கப்பட்டன. இது தொடா்பான அறிவிப்பு பலகைகள் அந்தந்த கோயில் வாயில்களில் வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி கூறியது; குமரி மாவட்டம் முழுவதும் 30 கோயில்களில் பக்தா்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆகம விதிகளின்படி வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

வெறிச்சோடிய குமரி: கன்னியாகுமரியில் கரோனா வைரஸ் எதிரொலியாக விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், முக்கிய வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், முக்கடல் சங்கமம், காந்தி மண்டப சாலை, சன்னதிதெரு, சூரிய அஸ்தமனப்பூங்கா உள்ளிட்டப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com