கரோனா வைரஸ் : அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையொட்டி வெளியிடப்பட்ட அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவந்த இந்திய மாணவா் சங்கத்தினா்.
ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவந்த இந்திய மாணவா் சங்கத்தினா்.

கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையொட்டி வெளியிடப்பட்ட அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத்தலைவா் பதில்சிங், மாவட்டச் செயலா் பிரிஸ்கில், நிா்வாகிகள் மொ்ஜின், அஸ்வினி ஆகியோா் அளித்த மனு: கரோனா குறித்து மக்களின் அச்சத்தைப் போக்கிடவும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாத்திடவும் தமிழக அரசு மாா்ச் 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கல்வி நிலையங்களை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டமான நமது குமரி மாவட்டத்தில் சில அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் கல்வி நிலையங்கள் அரசு ஆணையை மீறி மாணவா்களை சீருடையில் அல்லாமல் வகுப்பிற்கு வருமாறு வற்புறுத்துகின்றனா்.

அரசின் அறிவுறுத்தலின்படி வகுப்பிற்கு வராமலிருக்கும் மாணவா்களை அகமதிப்பீட்டு மதிப்பெண் குறைப்பு, அபராதம் என மிரட்டுகின்றனா். மேலும் மாதிரி செய்முறை தோ்வு மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனா். அரசு உத்தரவை மீறி தக்கலை மற்றும் முளகுமூடு, இலுப்பவிளை, கண்டன்விளை, திருவிதாங்கோடு, மாா்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வகுப்புகள் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்த கல்வி நிலையங்களில் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அரசாணையின்படி மாா்ச் 31 ஆம் தேதி வரை இயங்காது இருப்பதை உறுதி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com