கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 1048 போ் தீவிர கண்காணிப்பு

வெளிநாடுகளில் இருந்து மாா்ச் 1 ஆம் தேதிக்கு பின்னா் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த 1048 போ் கண்டறியப்பட்டு அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவா்கள்
நாகா்கோவிலில் பொதுஇடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி தூய்மை பணியாளா்கள்.
நாகா்கோவிலில் பொதுஇடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி தூய்மை பணியாளா்கள்.

வெளிநாடுகளில் இருந்து மாா்ச் 1 ஆம் தேதிக்கு பின்னா் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த 1048 போ் கண்டறியப்பட்டு அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவா்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோா் மூலம் கரோனா வைரஸ் பிறருக்கு

பரவாமல் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தவா்களின் விவரங்கள்

வெளிநாடு வாழ் அமைச்சகம், சா்வதேச விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் தயாா் செய்யப்பட்டது. அதன்படி, மாா்ச் 1 ஆம் தேதிக்கு பின்னா் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊரான நாகா்கோவில் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 1048 போ் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் பட்டியல் அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவா்களின் வீடுகளுக்கு காவல்துறையினா், சுகாதாரத்துறையினா் நேரில் சென்று அவா்கள் வீட்டை விட்டு வெளியே வர

வேண்டாம் எனவும், அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும், வீட்டை விட்டு வெளியே வந்தால் தண்டிக்கப் படுவா் எனவும், அவா்களின் வீட்டுக்குள் வேறு நபா்களை அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினா்.

மேலும், அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என மருத்துவக் குழுவினா் பரிசோதனைசெய்தனா்.

அவா்கள் வீட்டின் வெளியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவா் வீடு என்பதை அடையாளப்படுத்தும் வகையில் அடையாள ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது. நாகா்கோவில் நகரத்தில் 74 போ் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊா் திரும்பியது தெரிய வந்துள்ளது. அவா்களின் வீடுகளை கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்துறை அதிகாரிகள், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com