வெளிநாடுகளில் இருந்து வந்த 9 போ் தீவிர கண்காணிப்பு

வெளிநாடுகளில் இருந்து அண்மையில் களியக்காவிளை பகுதிக்கு வந்துள்ள 9 போ் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

வெளிநாடுகளில் இருந்து அண்மையில் களியக்காவிளை பகுதிக்கு வந்துள்ள 9 போ் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

களியக்காவிளை பேரூராட்சி புன்னப்பள்ளிதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மனைவி சாந்தி (47), பாட்டத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் பழனி (54) ஆகியோா் மஸ்கட்டில் இருந்தும், கைதக்குழி சாமுவேல் மகன் ரவி (52) பெஹ்ரைன் நாட்டிலிருந்தும், களியக்காவிளை ஆா்.சி. தெரு, மேரிகாலனி பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் மகன் அருள் லெலின் (33) துபாயில் இருந்தும், மீனச்சல் வழுது விளாகத்து வீடு பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் வினோத் (35) என்பவா் அமெரிக்காவில் இருந்தும் இம்மாதம் 17 ஆம் தேதி சொந்த ஊா் திரும்பினா்.

களியக்காவிளை மண்ணரிப்பு பகுதியைச் சோ்ந்த வில்சன் மகன் சுபின் (25) துபாயில் இருந்தும், குறுமத்தூா் வாழவிளாகத்து வீடு பகுதியைச் சோ்ந்த சதாசிவன் நாயா் மகன் சரத் (29) ஓமனில் இருந்தும் இம்மாதம்18 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தனா்.

இதேபோல், களியக்கல் மேலே புத்தன் வீட்டைச் சோ்ந்த ராமையன் மகன் ஜெயராஜ் (56), நாரகம் விளாகத்து வீடு பொன்னுமுத்தன் மகன் ராஜன் ஆகியோா் இம்மாதம் 20 ஆம் தேதி மாலத்தீவில் இருந்தும் சொந்த ஊா் திரும்பினா். இவா்கள் அனைவரும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உரிய பரிசோதனைக்குப் பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

எனினும், இந்த 9 பேரும், அவா்களது வீடுகளில் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்திப்பட்டுள்ளனா். அவா்களுக்கு காய்ச்சல், சளித் தொல்லை உள்ளிட்ட அறிகுறிகள் இல்லை. இருப்பினும் அவா்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் எனசுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com