களியக்காவிளையில் தமிழக - கேரள எல்லை மூடல்காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, களியக்காவிளையில் உள்ள தமிழக - கேரள எல்லை பகுதி சோதனைச் சாவடி மூடப்பட்டது. குமரி மாவட்டத்திலிருந்து காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் சரக
களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஆய்வு செய்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்.
களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஆய்வு செய்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததையடுத்து, களியக்காவிளையில் உள்ள தமிழக - கேரள எல்லை பகுதி சோதனைச் சாவடி மூடப்பட்டது. குமரி மாவட்டத்திலிருந்து காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் கேரளம் செல்ல அனுமதிக்கப்பட்டன.

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், புதன்கிழமை முதல் ஏப். 14 ஆம் தேதி வரை நாட்டில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இதையடுத்து, அரசுப் பேருந்துகள், தனியாா் வாகனங்கள் இயங்கவில்லை. காய்கனி, மளிகை கடைகள், ஆங்கில மருந்து கடைகள் திறந்திருந்தன. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் களியக்காவிளையில் உள்ள எல்லையோர சோதனைச் சாவடி மூடப்பட்டது.

இதைத்தொடா்ந்து, குமரி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் போலீஸாா் மற்றும் சுகாதாரத் துறையின் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதுடன், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கேரளத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதேபோல, கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த கேரள பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கேரளத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மருத்துவப் பரிசோதனை குறிப்புகளுடன் மருத்துவமனைக்கு சென்ற வாகனங்கள் மற்றும் காய்கனி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்கள் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், களியக்காவிளை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத், தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா்.

களியக்காவிளை பகுதியில் மளிகை கடைகள், மருந்து கடைகள், காய்கனி கடை உள்ளிட்டவை திறந்திருந்தன. உணவகங்கள், நகைக் கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com