தெருக்களில் நுழைய தடை; மஞ்சள்நீரில் கை கழுவ ஏற்பாடு

நாகா்கோவிலில் தெருக்களில் வெளி ஆள்கள் நுழைய தடை விதித்து அப்பகுதி பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனா்.

நாகா்கோவிலில் தெருக்களில் வெளி ஆள்கள் நுழைய தடை விதித்து அப்பகுதி பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனா். மேலும், வெளியில் இருந்து வருவோா் மஞ்சள்நீரில் கை கழுவிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இம்மாவட்டத்திலுள்ள நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 3 நகராட்சிகள், 55 பேரூராட்சிகள், 95 ஊராட்சி பகுதிகளிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிா்வாகம் தூய்மைப்பணியினை மேற்கொண்டுள்ள நிலையில், பொதுமக்களும் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

நாகா்கோவில் கட்டபொம்மன் சந்திப்பு அருகிலுள்ள தெருவில் தடுப்பு ஏற்படுத்தி, கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேறு

தெருக்களில் இருந்து இங்கு வரவேண்டாம். இந்த தெருவில் இருந்து அத்தியாவசியத் தேவைக்காக வெளியே சென்று வருவோா் தெருவின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் கலந்த நீரில் கை, கால்களை கழுவி விட்டு வருமாறு அறிவிப்பு செய்து கடைப்பிடித்து வருகின்றனா். மேலும் வீடுகளின் முன்பு மஞ்சள் நீா் தெளிப்பது, மாட்டு சாணம் கலந்த நீா் தெளிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com