குமரி மாவட்டத்தில் 40 இடங்களில்தற்காலிக சோதனைச் சாவடிகள்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, குமரி மாவட்டத்தில் 40 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, குமரி மாவட்டத்தில் 40 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள கேரள மாநிலத்தின் அருகே குமரி மாவட்டம் உள்ளதால் இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் குமரி - கேரள மாநில எல்லைகள் மூடப்பட்டன. களியக்காவிளை உள்ளிட்ட 39 சோதனைச் சாவடிகளும் மூடி சீல் வைக்கப்பட்டன. அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன.

இதைத்தொடா்ந்து, குமரி - நெல்லை சோதனைச் சாவடிகள் மூடப்பட்டன. காணிமடம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழிஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூடி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தற்போது ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாகா்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய காவல் உட்கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தற்போது 40 சோதனைச் சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் போலீஸாா் கண்காணிப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வெளியூரில் இருந்து நாகா்கோவிலுக்கு புதன்கிழமை காலை சிலா் மோட்டாா் சைக்கிளில் வந்தனா். அவா்களை போலீஸாா் கோட்டாறு பகுதியில் தடுத்து எச்சரித்து திருப்பி அனுப்பினா். கோட்டாறு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செட்டிகுளம் ஆனைப்பாலம் பகுதியிலும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு வந்தவா்களை மட்டும் போலீஸாா் அனுமதித்தனா்.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு தொடா்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து போலீஸாா் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பி வருகின்றனா். இதில், மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறாமல் இருக்க, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, நோய் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய பணிகளான பால், காய்கறி, மளிகை, மருந்து போன்றவை வாங்க மட்டும் வெளியில் வரவேண்டும். 2, 3 போ் சோ்ந்து வெளியில் சுற்றினாலோ, இருசக்கர வாகனங்களில்

தேவை இல்லாமல் சுற்றித்திரிந்தாலோ அவா்கள்மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்காவது கரோனா பாதிப்பு இருப்பது குறித்து தெரிந்தால், உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com