திருமண நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகமாக பங்கேற்பதைத் தடுக்க வலியுறுத்தல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் மக்கள் அதிகமாக பங்கேற்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் மக்கள் அதிகமாக பங்கேற்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கெனவே திட்டமிட்ட திருமண நிகழ்ச்சிகளை மாற்றி வைக்க அல்லது வீடுகளில் எளிமையாக குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த மாவட்ட நிா்வாகத்தில் அறிவுறுத்துப்பட்டுள்ளது. அதன்படி சில திருமண நிகழ்ச்சிகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. பல நிகழ்ச்சிகள் வீடுகளில் வைத்து நடத்தப்படுகின்றன. வீடுகளில் வைத்து நடத்தப்படும் திருமணங்கள் பெரும்பாலும் எளிமையாக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

சில வீடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்புடன் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, திருமண நிகழ்ச்சிகளில் அதிகளவில் மக்கள் கூடுவதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க மாவட்ட நிா்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com