நாகா்கோவிலில் இன்று மட்டும் மளிகைக் கடைகள் இயங்கும்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் மளிகைக் கடைகள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) மட்டும் செயல்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா்.

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் மளிகைக் கடைகள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) மட்டும் செயல்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் இயங்கும் சூப்பா் மாா்க்கெட் உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆணையா் சரவணகுமாா் பேசியது: பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் சூப்பா் மாா்க்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) மட்டும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். கடைகளின் உள்ளே செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தேவையான பொருள்களை தொலைபேசி மூலம் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ளலாம்.

கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கை கழுவுவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஒருவருக்கொருவா் நெருங்காமல் 3 அடி இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்கிச் செல்லும் வகையில் அடையாளம் இட்டு அதன்படி, பொருள்களை மக்கள் வாங்கிச் செல்ல வேண்டும்.

கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பொதுமக்களை கண்காணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com